கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே பெட்டிக்கடைக்காரரை இழுத்துச் சென்ற முதலை: தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெட்டிக்கடை உரிமையாளரை கடித்து இழுத்துச் சென்றது. அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் படகு மூலம் சென்று வலைவீசி தேடி வருகின்றனர்.

News image
Updated On :8 ஏப்ரல் 2015, 5:35 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெட்டிக்கடை உரிமையாளரை கடித்து இழுத்துச் சென்றது. அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் படகு மூலம் சென்று வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் முதலைகள் அட்டகாசம் தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை முதலை கடித்து 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. பலர் காயமுற்று கை, கால்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியில் பழைய கொள்ளிடம் அருகே சீர்காழி மெயின்ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் பாண்டுதுரை (52) என்பவர் வழக்கம் போல் புதன்கிழமை காலை பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது அவரை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்த ஊர்மக்கள் கல்லால் அடித்தும், அவரை இழுத்துச் சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாலைமறியல்: வனத்துறையினர் வருவதற்கு தாமதம் ஆனதால், வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் சிதம்பரம்-சீர்காழி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தேடும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர், வனத்துறையினர்
படகுகள் மூலம் வலைவீசி முதலை இழுத்துச் சென்ற பெட்டிக்கடைக்காரரின் உடலை தேடி வருகின்றனர்.

முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ  சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்தது: சிதம்பரம் பகுதியில் இதுவரை முதலை கடித்து 15-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

பலர் காயமுற்றுள்ளனர். தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது. மனிதஉயிரை பற்றி கவலைப்படாமல், முதலை உயிரை பற்றி வனத்துறையினர் கவலைப்பட்டு அதை பாதுகாத்து வருகின்றனர். எனவே முதலைகளை சுட்டுபிடித்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும். மேலும் தமிழகஅரசு நெய்வேலி பகுதியில் முதலை பண்ணை அமைத்து வனத்துறையினர் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள அனைத்து முதலைகளையும் பிடித்து முதலைப் பண்ணையில் கொண்டு பாதுகாப்பாக விட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.