வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே மகள் படுகொலை: தந்தை உள்பட இருவர் கைது

திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தவறான உறவைக் கண்டித்த மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :8 ஏப்ரல் 2015, 9:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தவறான உறவைக் கண்டித்த மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்தனர்.

முன்னீர்பள்ளம் அருகே பூக்குழி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சொள்ளமுத்து மகன் பெருமாள் (60). கூலித் தொழிலாளியான இவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பெருமாளுக்கு பேச்சியம்மாள் (42) என்ற மகளும், மாரிமுத்து (25) என்ற மகனும் உள்ளனர்.

பேச்சியம்மாளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். மாரிமுத்து திருமணம் ஆகவில்லை. மனைவி இறந்துவிட்ட நிலையில் பெருமாளுக்கும் அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

தந்தையின் தவறான உறவு குறித்து பலரும் பேச்சியம்மாளிடம் அவதூறாக பேசியதால், வேதனையடைந்த அவர் தனது தந்தையை கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த பெருமாள் புதன்கிழமை அதிகாலை பேச்சியம்மாளை அரிவாளால் வெட்டி ஓடி விட்டார்.பலத்த காயமடைந்த பேச்சியம்மாள், சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரன், காவல்ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து பெருமாள், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.