வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆந்திர சம்பவம்: நெல்லையில் ஆர்ப்பாட்டடம்: ஆந்திர வங்கி முற்றுகை

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர வங்கியை

News image
Updated On :13 ஏப்ரல் 2015, 9:26 am

ஷேக் அப்துல்காதர்

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின், மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வங்கி முற்றுகை: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகா சபா அமைப்பினர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டுமுற்றுகையிட்டனர். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.