நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ரேசன் கடை கோரி பொதுமக்கள் முற்றுகை
முக்கூடல் அருகே கலியன்குளம் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு


முக்கூடல் அருகே கலியன்குளம் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு முற்றுகையிட்டனர்.
முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட கலியன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முக்கூடலில் இயங்கி வரும் ரேசன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.தொலைதூரத்தில் இயங்கும் ரேசன் கடைக்கு பொதுமக்கள் அடிக்கடி செல்ல முடியாத நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது. குடும்ப அட்டைக்கு அனைத்து பொருட்களும் கிடைக்காமல் இங்கு வசிக்கும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிராம மக்கள் நிதி வசூலித்து ரேசன் கடைக்கு தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளனர். எனினும் அங்கு ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கலியன்குளம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்ட பேரூராட்சி உறுப்பினர் எஸ். பாலசுப்பிரமணியன், ஒன்றிய மக்கள் அமைப்பின் நிர்வாகி ஜோதி ஆகியோர் தலைமையில் ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...