மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட மேலும் 2 பேர் வேட்புமனு தாக்கல்

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட வியாழக்கிழமை மேலும் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

News image
Updated On :16 ஏப்ரல் 2015, 12:56 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட வியாழக்கிழமை மேலும் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் சிதம்பரம் வாண்டையார் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது. தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி உள்ளிட்ட 10 பேர் தேர்தல் ஆணையாளர்களிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

2-ம் நாளான வியாழக்கிழமை முன்னாள் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, கே.என்.ஞானவேல் ஆகியோர் தேர்தல் ஆணையாளர் வி.எஸ்.விஜய்யிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் மாவட்டச் செயலாளர் பதவிக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு 8 பேரும், மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 9 பேரும், மாவட்ட இணைச்செயலாளர் பதவிக்கு 4 பேரும், பொருளாளர் பதவிக்கு 3 பேரும், பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 28 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி.எஸ்.விஜய் எம்எல்ஏ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.