தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 7 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை

News image
Updated On :18 ஏப்ரல் 2015, 6:47 am

கவியழகன்

சிங்கப்பூரிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 7 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.50-க்கு வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தொண்டியைச் சேர்ந்த மு. நிவாஸ்கான், 7 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். இவருக்கு உதவியதாக விமான நிலைய மருத்துவ அதிகாரி இசக்கி, ஊழியர் நடராஜன் ஆகியோர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.