காரைக்குடி அருகே தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்தும், டிப்பர் லாரியும் சனிக்கிழமை காலையில் நேருக்குநேர் மோதி எற்பட்ட விபத்தில் விரைவுப் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். ஓட்டுநர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு காரைக்குடி அரசு விரைவுப்பேருந்து புறப் பட்டது. பேருந்தை முசிறி அருகேயுள்ள புதுப்பட்டி காலணியைச்சேர்ந்த ராமச்சந்திரன் (35) ஓட்டினார். நாமக்கல் மாவட்டம் தில்லைநத்தம் கிராமத்தைச்சேந்த குணசேகரன் (45)நடத்துநராக பணியிலிருந்தார்.
பேருந்து சுமார் 20 பயணிகளுடன் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியைக்கடந்து காரைக்குடி நோக்கி நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தது. காலை 6.10 மணி யளவில் நங்கப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் திடிரென மோதியது.இதில் பேருந்து முன்பகுதியில் இருந்த நடத்துநர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 20 பயணிகளும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் செட்டிநாடு காவல்நிலைய போலீஸார் நேரில் சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த நடத்துநர் குணசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்விபத்துகுறித்து செட்டிநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே சக்குடி கிராமத்தைசேர்ந்த முனியசாமி (28) என்ப வரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலங்கரை விளக்கக் கப்பல்கள் இயக்குநரகத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஈரான் உடன் அமைதிப்பேச்சு! பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்க சென்ற வைபவ் சூர்யவன்ஷி!

தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


