சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே குமராச்தி கோப்பாடிசெட்டு என்ற கிராமத்தில் இளங்கோவன் என்பவரது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடர்ந்து நாய்கள் குரைத்துள்ளது. சத்தம் கேட்டு


சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
சிதம்பரம் அருகே குமராச்தி கோப்பாடிசெட்டு என்ற கிராமத்தில் இளங்கோவன் என்பவரது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடர்ந்து நாய்கள் குரைத்துள்ளது. சத்தம் கேட்டு இளங்கோவன் வெளியே வந்து பார்த்த போது வாசலில் பெரிய முதலை ஒன்று படுத்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்று குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், எம்.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 8 அடி நீளம், 400 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பாக கொண்டு விட்டனர். கோப்பாட்டிசெட்டு கிராமம் அருகே உள்ள உப்பனாற்றிலிருந்து முதலை தப்பி ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...