வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் ஏஐடியூசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொழிலாளர் நல வாரியங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கையை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர்

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 9:38 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொழிலாளர் நல வாரியங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கையை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்துறை செயலிழந்துள்ளது. தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமை, நியாயமான கோரிக்கையை நிறைவேற்றப்படுவதில்லை. தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு முறையாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதில்லை. இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தொழிலாளர் நல வாரியங்களை செம்மைபடுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து அமைப்பின் மாநில செயலர் நா. பெரியசாமி பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளர் நல வாரியங்கள் செயலிழந்து விட்டது. உடல் உழைப்புத் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து அரசு செவிசாய்ப்பதில்லை. தொழிலாளர்களுக்கு நல வாரியங்களில் உதவிகள் வழங்க மறுக்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு இல்லை என்றார் அவர்.

அமைப்பின் மாவட்ட பொதுச்செயலர் ஆர். சடையப்பன் தலைமை வகித்தார். எம்.எஸ். பாலகிருஷ்ணன், சி. லட்சுமணன், ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய சங்கச் செயலர் ஆர். கசமுத்து, மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார், அமைப்பை சேர்ந்த எம். சாமி, சிலம்பு ராமசாமி, ஏ.எம். சத்யன், ஆர். ரங்கன், பி. முருகன், இ. தர்க்கைமுத்து உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.