மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க நுகர்வோர் குழுமம் கோரிக்கை

மே.1-ம் தேதி நடைபெறவுள்ள சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எவ்வித முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறவில்லை. எனவே கும்பாபிஷேக பாதுகாப்பு மற்றும்

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 12:47 pm

ஜி.சுந்தரராஜன்

மே.1-ம் தேதி நடைபெறவுள்ள சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எவ்வித முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறவில்லை. எனவே கும்பாபிஷேக பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த விபரங்களை, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனதமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரசு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது ரகசியமாகவே உள்ளது. மேலும் வரும் மக்களுக்கு மருத்துவவசதி, தங்கும் வசதி, கழிப்பறை வசதி, உணவு வசதி உள்ளிட்ட எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.சிதம்பரம் நகரின் எல்லையிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள்

அங்கிருந்து 2 கி.மீட்டர் தூரம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 கி.மீட்டர் தூரம் நடந்து வர முடியாதவர்களுக்கு, என்ன போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படவில்லை.

நான்கு வீதிகளிலும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எப்படி வெளியே செல்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் நகரில் உள்ள அனைத்து விடுதிகளிலும் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், கூடுதலாகவரும் மக்கள் தங்குவதற்கு இடம் இல்லை. கோடை விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மக்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் சி.டி.அப்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.