மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2015, 2:31 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிதம்பரம் அருகே என்.பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(63). இவரது மகன் சங்கர் என்கிற கல்யாண்குமார் (44). இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 9-10-2013ல் தனது தந்தை சிவப்பிரகாசத்திடம் இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். வேலை வெட்டி இல்லாத உணக்கு இரண்டாவது திருமணம் வேண்டுமா என தந்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாண்குமார் உருட்டு கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்யாண்குமாரை கைது செய்து சிதம்பரம் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை முடிவுற்று நீதிபதி கிங்ஸ்லி கிருஸ்டோபர் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில் குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்ட கல்யாண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.