வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தனிடம் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்

உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனிடம், ஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 7:24 am

ஷேக் அப்துல்காதர்

உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனிடம், ஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான குமரிஅனந்தன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலிக்கு வருகை தந்தார். சனிக்கிழமை காலை தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரிஅனந்தனை ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா. ஆவுடையப்பன், சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது குமரிஅனந்தனிடம் தொலைபேசியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

விரைவில் நலம் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.அப்போது, கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மு. அப்பாவு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.