வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் போலீஸாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 57 பேர் கைது

திருநெல்வேலியில் போலீஸாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 11:05 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் போலீசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள், கல்லூரிகளில் பயின்று வரும் தலித் மாணவர்கள், சமூகப் பணியில் ஈடுபடும் இளைஞர்கள் மீது எந்த குற்ற பின்னணி இல்லாத நிலையில் அவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் மது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள், அமைப்பின் மாநகர செயலர் வண்ணை முருகன் உள்ளிட்டோரை முன் கூட்டியே போலீஸார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ப. ராஜ்குமார் தலைமையில் வந்தனர். அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் பங்கேற்ற 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.