அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்க விண்ணப்ப விற்பனை தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக 2015-16 ஆண்டிற்கான விண்ணப்பி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக 2015-16 ஆண்டிற்கான விண்ணப்பி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் ராம.சந்திரசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ரகுபதி மற்றும் புத முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 1014-15 கல்வி ஆண்டு தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 565 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் சேர்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினோம். சுமார் 66 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்னர். இந்த ஆண்டு தொலைதூரக்கல்வி இயக்க புத்தகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்கள் வைக்கப்பட்டு சுமார் 460 மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் முதன் முறையாக இந்த ஆண்டு முதல் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் கிரடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாடங்கள்: தொலைதூரக்கல்வி இயக்கத்தில் முதுகலை டிப்ளமா இன் தமிழ்பண்டிட், ஆண்டிராய்டு படிப்பு உள்ளிட்ட 3 புதிய படிப்புகள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலையில் ரெகுலர் முறையில் எம்.ஏ கிளாச்சிக்கல் தமிழ் 2 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதிலும் பயிலும் 20 மாணவர்களுக்கு மத்திய செம்மொழி நிறுவனம் தலா ரூ 3 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் அறிவியல் புலத்தில் முதுகலை டிப்ளமா இன் கிளினிக்கல் பயோ-கெமிஸ்டரி மற்றும் மெடிக்கல் லேப்-டெக்னீஷியன் படிப்புகள் தொடங்கப்படவுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...