மூதாட்டி குளத்தில் விழுந்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக மூதாட்டி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக மூதாட்டி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லபுரம் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன் மகன் மாரியப்பன் (45). இவரது வீட்டில் தாய் பாப்பம்மாள் (75) இருந்துள்ளார்.மாரியப்பனின் சகோதரி லட்சுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, மாரியப்பன் வீட்டில் வந்து இருந்துள்ளார். இதில் பாப்பம்மாள் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து சமீபத்தில் சுகம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டு விட்டுச் சென்றவர் திருமுக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரியப்பன், நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...