வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு
புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுவை அடுத்த குரும்பாபபேட்டில் பெருந்தலைவர் காமராஜர்வேளாண்மை அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 500-க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி புதன்கிழமை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வேளாண்மை நிலைய வாயிலில் போராட்டம் நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுபற்றி தகவலறிந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் வேளாண்மை அறிவியல் நிலைய ஊழியர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...