ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கு: தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதித்துறை நடுவர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 10:25 am

இன்பராஜ்

தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதித்துறை நடுவர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

 தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான சீமென் கார்டு ஓகியோ என்ற ஆயுதக் கப்பலை கடந்த 2013 ஆம் ஆண்டு கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.

 மேலும், கப்பலில் இருந்த 35 வீரர்களும், அவர்களுக்கு டீசல் வழங்க உதவியதாக தூத்துக்குடி மற்றும் சென்னையைச் சேர்ந்த 8 பேரையும் கியூ பிரிவு போலீஸôர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்திலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

 கப்பல் ஊழியர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்கியதோடு ஆயுத சட்டப் பிரிவையும் வழக்கில் இருந்து நீக்கினர். இதை எதிர்த்து கியூ பிரிவு போலீஸôர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கை கீழமை நீதிமன்றமே விசாரணை மேற்கொண்டு 6 மாதத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 அதன் அடிப்படையில் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடுவர் பெஞ்சமின் சாமுவேல் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது கப்பல் ஊழியர்கள் 35 பேரும், அவர்களுக்கு டீசல் மற்றும் உணவுப் பொருள் விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட 8 பேரும் நேரில் ஆஜராகினர்.

 இந்த வழக்கில் ஆயுத தடைச் சட்டப் பிரிவு உள்ளதால் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றுவதாகவும், மீண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதித் துறை நடுவர் பெஞ்சமின் சாமுவேல் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.