மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்டாக் பொறியியல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

புதுவை சென்டாக் பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலாப்பட்டு பாண்டிச் சேரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2015, 7:03 am

சுஜித்குமார்

புதுவை சென்டாக் பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு காலாப்பட்டு பாண்டிச் சேரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 2000 பொறியியல் பாடப்பிரிவு இடங்களுக்கு 5218 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 5126 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.  மாணவர்களுக்கு ஆர்வமில்லை.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவ, மாணவியரிடம் போதிய ஆர்வமில்லாத நிலை காணப்பட்டது. முதல் பிரிவு கலந்தாய்வில் 150 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதில் வெறும் 10 பேரே பங்கேற்றனர். பிற்பகலில் பி.பார்ம் படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 900-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறவில்லை. இதுதொடர்பானவழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் தீர்ப்பு வெளியான பின்னரே எஸ்.சி. பிரிவினருக்கான மருத்துவ, பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.