11 பாரம்பரிய நெல் ரகங்கள்: சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விநியோகம்
புதுச்சேரி வேளாண் துறை சார்பில் சாகுபடி செய்தற்காக விவசாயிகளுக்கு 11 பாரம்பரிய நெல் ரகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.


புதுச்சேரி வேளாண் துறை சார்பில் சாகுபடி செய்தற்காக விவசாயிகளுக்கு 11 பாரம்பரிய நெல் ரகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வேளாண்துறை சார்பில் ஆத்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், காலைநடைகளின் உற்பத்திகளை பெருக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நமது முன்னோர்கள் காலாம் காலமாக சாகுபடி செய்துவந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு உணாóத்தும் வகையில் நெல் பெருவிழாவை ஆத்மா நடத்தியது. இதில் 150 விவசாயிகளுக்கு 11 பாரம்பரிய நெல் ரகங்கள் 2 கிலோ வீதம் வழங்கப்பட்டது.
ரூ.2 கோடியில் வேளாண் கருவிகள்
மேலும், ஆத்மா திட்டக் குழுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக இவ்வாண்டு 17 குழுக்கள் தோóவு செய்யப்பட்டு ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம், நெல் நடவு இயந்திரம், மினி டிராக்டர், பவர் டிரில்லர், வைக்கோல் கட்டும் இயந்திரம், மற்றும் மணிலா கொட்டை பிரிக்கும் இயந்திரம் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து வேணாண் துறை இயக்குனர் ராம்மூôóத்தி பேசியது: புதுச்சேரியில் விளைநிலங்கள் குறைந்து வந்தாலும், உற்பத்தி குறையவில்லை. இதனால் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரும் மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு அரசு சார்பில் தர சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் குமார், ஆத்மா திட்ட இயக்குநர் ரவிப்பிரகாசம் மற்றும் அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...