ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. அன்பழகன் துவக்கினார்
உப்பளம் தொகுதியில் ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணியை ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.


உப்பளம் தொகுதியில் ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணியை ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கடலூர் சாலையையும், சுப்பையா சாலையையும் இணைக்கும் டாக்டர் அம்பேத்கர் சாலை பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.ஒரு கோடி செலவில் மேம்படுத்தும் பணி ந டக்கிறது.
இதற்கான பூமி பூஜை விழா அவ்வை நகர் சந்திப்பில் நடந்தது. அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ்நாதன், உதவி பொறியாளர் ஜெயகாந்தன், இளநிலை பொறியாளர் வேதாச்சலம், தொகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க தலைவர் சின்னதுரை,
செயலாளர் பாப்புசாமி, மகளிரணி அந்தோணியம்மாள், பவானி, கருணாநிதி, அன்பழகன் உடையார், ரெலிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இச்சாலைப் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...