மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் ராகுல்காந்தி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை புதுச்சேரி வந்திறங்கினார்.

News image
Updated On :8 டிசம்பர் 2015, 6:41 am

சுஜித்குமார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை புதுச்சேரி வந்திறங்கினார்.

புதுச்சேரி ரோடியார் பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், பொதுச் செயலாளர்  முகுல் வாஸ்னிக் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அவர் காரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் பின்னர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார் ராகுல்.

தொடர்ந்து கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிடுகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.