தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர்: ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் மேக்குடி பிச்சாவரம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சுரேஷ்குமார் (24). இவர் சொந்தமாக ஆம்னி வேன் ஓட்டி வருகின்றார்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 9:13 am

கவியழகன்

திருச்சி மாவட்டம் மேக்குடி பிச்சாவரம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சுரேஷ்குமார் (24). இவர் சொந்தமாக ஆம்னி வேன் ஓட்டி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை , ஜனவரி 20-ம் தேதியன்று ஆசைவார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தாய், தந்தை இல்லாத நிலையில் வளர்ந்து வந்த சிறுமி, சம்பவம் குறித்து பெரியம்மாவிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெரியம்மா ஜிய்யப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மார்டின் குற்றவாளியான சுரேஷ்குமாருக்கு இளம் சீறார் பாலியல் வன்கொடுமை காப்பாற்று சட்டத்தின்படி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.