அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

களப்பணியாளர்கள், வனக்குழு உறுப்பினர்களுக்கு நில பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் வகையில் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள களப்பணியாளர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்களுக்கு நிலப்பரப்பு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 4:23 am

கோ.ஜெயக்குமார்

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் வகையில் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள களப்பணியாளர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்களுக்கு நிலப்பரப்பு பாதுகாப்பு மற்று்ம வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வனவிரிவாக்க மையத்தில் வனத்துறை களப்பணியாளர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்களுக்கு நிலப்பரப்பு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சியை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய கள இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசிய போது கூறியதாவது:

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், உலக வங்கி நிதி உதவியோடு உத்திரகாண்ட் மாநிலத்தில் அஸ்கோட் மற்றும் குஜராத் மாநிலத்தின் லிட்டில் ராண் ஆப்கட்ச் என்ற இரு இடங்களில் உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம்- கேரளத்தில் உள்ள அகஸ்தியர் மலை மற்றும் மத்தியபிரதேசம் மகாராஷ்டிராவில் உள்ள சாத்புரா நிலப்பரப்புகளிலும் இத்திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் உயிர்பன்மை பாதுகாப்பை உயிரோட்டமாக வைத்து பல்வேறு துறைகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள நெறிமுறைகளை தயாரித்து கடைபிடிக்க வழி செய்வதும் நிலப்பரப்பில் நிலைத்த நீடித்த உயிர்பன்மை பாதுகாப்பிற்கு அப்பகுதிகளில் வாழும் அடித்தள மக்கள் அமைப்புகள் மூலம் அவர்களின் பெரும் பங்கேற்பை பெற்று வனத்தை காப்பதும் இதன் முக்கிய குறிக்கோள்களாலும். இதற்காக மேற்குத் தொடர்ச்சிமலை உள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாட்டங்களில் 6 வன சரகங்களில் வனப்பகுதியை ஒட்டிய தலா 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராம வனக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இக்குழுவினரும் வனத்துறை சார்ந்த களப்பணியாளர்களும் இணைந்து செயல்பட்டு வனத்தின் தன்மையையும் அதன் சிறப்பையும் பாதுகாக்க வேண்டும். வனத்தில் உயிரினச் சூழல் மாறுபட்டால் அது மனித வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே, வனத்தையும் அதில் உள்ள சிறப்புக்களையும் அதோடு மக்களையும் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றார்.

பயிற்சி வகுப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய துணை இயக்குநர் பிள்ளைவிநாயகம், விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார், வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தீத்தடுப்பு காவலர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.