அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெளி நாடு அனுப்புவதாகக் கூறி் ரூ.1.20 லட்சம் மோசடி: தம்பதியினர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெளி நாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 1:20 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெளி நாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வன்னியம்பட்டி, பிள்ளையார்குளம், ராமகிருஷ்ணாபுரம் புதூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பொன்னம்மாள் (45). இவர் சத்துணவு ஊழியர். இவரது மகன் மாரீஸ்வரன் மெக்கானிக்கல் இன்ஜினியரியங் படித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர்களது உறவினரான தீபா மற்றும் இவரது கணவர் கோபி (எ) ராஜ் நாராயணன் ஆகியோர், பொன்னம்மாளிடம் 29.11.14-ம் தேதி வந்து, மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்கள். இதற்காக ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு 15.1.15-ம் தேதி துபாய் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்கள்.

தீபா, வெளிநாட்டுற்கு ஏற்கெனவே ஒருவரை அனுப்பிய விசாவின் நகலை பொன்னமாளின் மகனது இ-மெயிலுக்கு அனுப்பியுள்ளார். மகனுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பொன்னம்மாள் இருந்துள்ளார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி, மகனை வேலைக்கு அனுப்பவில்லையாம். மேலும் எந்த காரணமும் கூறாமால் வேலைக்கு அனுப்ப இயலாது என்று கூறி 6.2.15-ம் தேதி நாளிட்ட காசோலையை கொடுத்துள்ளார்கள். இந்த காசோலையை வங்கியில் பொன்னம்மாள் செலுத்தியபோது, அவர்களது கணக்கில் போதிய பணம் இல்லை என்று திரும்பியுள்ளது. பணத்தை திரும்பக் கேட்டதற்கு பொன்னம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பொன்னம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீபா மற்றும் அவரது கணவர் கோபி (எ) ராஜ் நாராயணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.