போலி பத்திரம் தயார் செய்து மோசடி: இருவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்ததாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் எம்.சுந்தரமூர்த்தி (69). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். ராஜபாளையம், பூபதிராஜா வங்கி சாலையைச் சேர்ந்தவர் அ.கண்ணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கண்ணன் மற்றும் சேத்தூர் த.வைரமுத்து ஆகியோர் சேர்ந்து சுந்தரமூர்த்தியிடம், பிள்ளையார்குளம் கிராமத்தில் நிலம் இருப்பதாயும், கிரையம் முடிக்கவும் வலியுறுத்தியுள்ளார்கள். 29.4.11-ம் தேதி இந்த இடத்தை ரூ.8,19,840-க்கு சுந்தரமூர்த்திக்கு கிரையம் முடித்துக் கொடுத்துள்ளார்கள். அந்த பத்திரத்தைக் கொண்டு, பட்டா மாற்றம் செய்ய சென்றபோது, குறிப்பிட்ட இடம் அரசு புறம்போக்கு என தெரியவந்துள்ளது. 22.8.13-ம் தேதி இது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, தானே பட்டா மாற்றம் செய்து தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் செய்து தரவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் சுந்தரமூர்த்தி புகார் செய்துள்ளார். அப்போது ரூ.2.40 லட்சம் பணத்தை கண்ணன், சுந்தரமூர்த்தியிடம் திரும்ப கொடுத்துள்ளார். மேலும் மீதமுள்ள ரூ.6 லட்சத்திற்கு 6 காசோலைகளையும் கொடுத்துள்ளார். 15.10.2015-ம் தேதி காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கண்ணன் கணக்கில் போதிய பணம் இல்லததால் காசோலைகள் திரும்பியுள்ளது. இது குறித்து கண்ணனிடம் கேட்டபோது பணம் திரும்ப தர இயலாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து 23.11.15-ம் தேதி தென்மண்டல காவல் துறை தலைவரிடம் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். இப் புகார் மனு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கண்ணன் மற்றும் வைரமுத்து மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...