/

காதல்ஜோடி நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன்.  இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி(23).  இவர் கணிப்பொறி பட்டதாரி ஆவார்.  இதே ஊரை சேர்ந்தவர்

News image
Updated On :4 பிப்ரவரி 2015, 2:04 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காதல்ஜோடி சரணடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன்.  இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி(23).  இவர் கணிப்பொறி பட்டதாரி ஆவார்.  இதே ஊரை சேர்ந்தவர் கணேசன்.  இவரது மகன் ராஜேந்திரன்(25).  இவர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு தனியார் கட்டிட நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் ஜனனிக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் கடந்த மாதம் 29ம் தேதி பழனியில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.  இதனால் மகள் கடத்தப்பட்டதாக முருகேசன் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.  வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜனனியை தேடத் துவங்கினர். 

இதுகுறித்து தகவலறிந்த ஜனனி, ராஜேந்திரன் தம்பதியினர் பழனி சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகி விபரங்களை தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.