கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஒட்டப்பிடாரத்தில் கட்டடத் தொழிலாளி கொலை

ஒட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை இரவு கட்டடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செயயப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீஸார்

News image
Updated On :6 பிப்ரவரி 2015, 2:04 pm

இன்பராஜ்

ஒட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை இரவு கட்டடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செயயப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (43). கட்டடத் தொழிலாளி.  இவர், வியாழக்கிழமை இரவு அங்குள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

 சம்பவ இடத்துக்குச் சென்ற ஒட்டப்பிடாரம் போலீஸôர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்,  சேதுராமனை கொலை செய்ததாக வெள்ளாரம் தெற்குதெருவைச் சேர்ந்த முருகனை (46) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 கொலையுண்ட சேதுராமனின் உறவுப் பெண் மாரியம்மாள் குறித்து முருகன் தகாதா வார்த்தைகளால் பேசியதாகவும் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.