கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்தில 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்தில 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே ஓசூரிலிருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை தஞ்சையைச் சேர்ந்த குமார்(39) என்பவர் ஓட்டி வந்தார். டீ குடிப்பதற்காக வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். அப்போது பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி வந்த மினி லாரி ஒன்று, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் மினி லாரியில் பயணம் செய்த ஓட்டுனர் குமார்(25),பாபுபாய்(48) மற்றும் மாதவன்(18) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். பர்கூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...