காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளான வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, சட்டப்பாறை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாட்டம்


பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளான வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, சட்டப்பாறை, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலைப்பகுதிகளில் தற்போது மலை இல்லாததால் குடிநீருக்காகவும், உணவு தேவைக்காகவும் காட்டுயானைகள் தனியார் தோட்டங்களில் புகுந்து தற்போது அட்டகாசம் செய்யத் துவங்கியுள்ளது. பொருந்தல் பகுதியில் பகல் நேரங்களிலேயே ஒற்றையானை நடமாட்டத்தால் கிராமமக்கள் விளைநிலங்களுக்கு செல்ல பயப்படும் நிலை நீடித்து வருகிறது. தற்போது நெல், சோளம் ஆகியன கதிர்பிடித்துள்ள நிலையில் அதன் வாசத்துக்கு யானைகள் இரவு நேரங்களில் வருகின்றது.
கடந்த சில நாட்களாக ஏராளமான இடங்களில் நெல், தென்னை ஆகியவற்றை காட்டுயானைகள் சேதம் செய்துள்ளது. பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் வலங்கையப்பன் மகன் அம்மாபட்டி(47). இவர் பாலசமுத்திரத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள செங்கோட்டுப்பாறை எனும் இடத்தில் விவசாயம் செய்துள்ளார். வியாழக்கிழமை அதிகாலை வயலில் காவல் இருந்த போது வயல்வெளிக்கு வந்த காட்டுயானைகள் அவரை துரத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...