ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே சிறுவன் மீது குண்டு பாய்ந்தது : கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

விராலிமலை அருகே சிவராத்திரி வேட்டைக்கு சென்ற இடத்தில் எதிர்பாரமல் சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 4:42 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே சிவராத்திரி வேட்டைக்கு சென்ற இடத்தில் எதிர்பாரமல் சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை ஒன்றியம் நடுப்பட்டி காட்டுப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சிவராத்திரி  வேட்டையில், முயலை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு சிதறி சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் துளைத்தது.

இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விராலிமலை ஒன்றியம் மீனவேலி ஊராட்சியைச் சேர்ந்த பெரிச்சிபட்டியைச் சேர்ந்த  பொதுமக்கள் ஆண்டு தோறும் சிவராத்திரியை தொடர்ந்து வரும் நாட்களில் காட்டுபகுதிகளில் சென்று முயல் வேட்டையாடுவடு வழக்கம்.

நிகழாண்டுக்கான முயல் வேட்டைக்கு பிப், 19 ம் தேதி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விராலிமலை  அருகேயுள்ள நடுப்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியே வந்த முயலை ராஜீ(58) என்பவர் தன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க முற்பட்டபோது வேட்டைக்கு அவருடன் வந்த தமிழரசன்(12)  மீது எதிர்பாரமல் குண்டு பட்டது. குண்டடிபட்டு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விராலிமலை போலிஸார் வழக்கு பதிந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து ராஜீவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.