விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விலகல்
பழனியை அடுத்த கோரிக்கடவு ஊராட்சி தலைவர் திருவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார்.


பழனியை அடுத்த கோரிக்கடவு ஊராட்சி தலைவர் திருவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார்.
பழனியை அடுத்த கோரிக்கடவு ஊராட்சி தலைவராக கணபதி பாலசுப்பிரமணியன் என்ற திருவளவன் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சிலதினம் முன்பு பழனி-தாராபுரம் நெடுஞ்சாலையில் கோரிக்கடவில் சாலையின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏராளமான பொதுமக்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது ஏராளமான கடைகள் புறம்போக்கில் இருப்பது கண்டறியப்பட்டு இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் விடுதலை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினராக கூட இருக்க முடியாத நிலையில் தாம் இருப்பதாக கட்சி தலைமைக்கு தெரிவித்துவிட்டு கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...