6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நெல்லையில் மறியல்: 153 பேர் கைது

ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 18 மற்றும் மாவட்டங்களில் 91 ஆக மொத்தமுள்ள 109 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும்.

News image
Updated On :8 ஜனவரி 2015, 10:14 am

முத்துகுமார்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைமறியலில் பங்கேற்ற 153 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 18 மற்றும் மாவட்டங்களில் 91 ஆக மொத்தமுள்ள 109 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உருவாக்கி இப்போது பணிபுரிபவர்களை அப் பணியிடங்களில் ஈர்ப்பதோடு, அனைத்து கணினி உதவியாளர்களுக்கும் குடும்ப நல நிதித்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரே சீரான மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வட்டாரப் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும். நேரடி உதவியாளர்களுக்குப் பணி விதிகளை உருவாக்குதல் வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் அ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வெ.சண்முகசுந்தரம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பார்த்தசாரதி, மு.விநாயகசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தொடர்ந்து திருநெல்வேலி-மதுரை சாலையில் மறியல் செய்ய முயன்ற 11 பெண்கள் உள்பட 153 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியலையொட்டி திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கந்தசாமி தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.ஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.