மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதல்: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி, வீரப்ப நகரைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம்(47). ஆடிட்டரான இவர் தனது மனைவி, கற்பகம்(42), மகன் அரவிந்த்(21), மகள் ஐஸ்வர்யா(13) மற்றும் தனது அலுவலகத்தில் பணிபுரியும் மணி(28),

News image
Updated On :11 ஜனவரி 2015, 9:13 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேம்பால தடுப்பு சுவரின் மீது கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி, வீரப்ப நகரைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம்(47). ஆடிட்டரான இவர் தனது மனைவி, கற்பகம்(42), மகன் அரவிந்த்(21), மகள் ஐஸ்வர்யா(13) மற்றும் தனது அலுவலகத்தில் பணிபுரியும் மணி(28), ராஜசேகரன்(35), பாஷா(32) ஆகியோருடன்  பெங்களூருக்கு காரில் சென்றுள்ளார். பெங்களூரில் பொங்கல் பண்டிகைக்கு துணிகளை வாங்கிய அவர் கிருஷ்ணகிரிக்கு நள்ளிரவு திரும்பினார். கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது அந்தவழியாக வந்தவர்கள் 7 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.  பின்னர் அனைவரும் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால் செல்லும் வழியிலேயே கற்பகம், மணி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 5 பேரும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.