காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு: நிச்சயதார்த்த நாளில் இளம்பெண் தற்கொலை
காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வேறொருவருக்கு நிச்சயதார்த்தம் நடத்தவிருந்த நாளில் இளம்பெண் ரயில்முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டார்.


காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வேறொருவருக்கு நிச்சயதார்த்தம் நடத்தவிருந்த நாளில் இளம்பெண் ரயில்முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி முத்தரசநல்லூர் முத்தமிழ்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் வினோதினி (24). பட்டயப்படிப்பை முடித்துவிட்டு முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரத்த சோதனைக்கூடத்தில் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கும் துறையூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் அதிகாலை வினோதினி வீட்டருகே உள்ள தண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போலீஸார் கூறியது:
வினோதினிக்கு நடைபெறவிருந்த திருமணத்தில் விருப்பமில்லாததால் அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதனை ஏற்காத பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...