மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாதந்தோறும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.3500,மருத்துவப்படி ரூ.300 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மயிலாடுதுறையில் ஓய்வுப் பெற்ற அலுவலர்


மாதந்தோறும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.3500,மருத்துவப்படி ரூ.300 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மயிலாடுதுறையில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் கோ.கண்ணன் தலைமை வகித்தார்.சங்கத்தின் நாகை மாவட்டத் துணைத்தலைவர் க.உலகநாதன்,தலைமையிடத் துணைத் தலைவர் த.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.3500-ம் மருத்துவப்படி ரூ.300-ம் வழங்கவேண்டும்,ஓய்வூதியர் இறக்கும்போது ரூ 1.50 லட்சம் வழங்கவேண்டும்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்,முழு ஓய்வூதியம் பெற குறைந்த பட்ச பணிக்காலம் 20 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மயிலாடுதுறை,செம்பனார்கோயில்,குத்தாலம்,திருமருகல்,வேதாரண்யம்,மணல்மேடு ஆகிய கிளைகளைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர்கள் 150-க்கு மேற்பட்டோர் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...