6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் மாமன்ற உறுப்பினர் மௌன போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 48 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற எஸ்.என்.சரவணன் உள்ளார். இவரது வார்டு

News image
Updated On :22 ஜனவரி 2015, 9:38 am

முத்துகுமார்

திருநெல்வேலி 48 ஆவது வார்டில் வளர்ச்சிப் பணிகள் செய்யாததைக் கண்டித்து அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் எஸ்.என்.சரவணன் வியாழக்கிழமை மௌன போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 48 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற எஸ்.என்.சரவணன் உள்ளார். இவரது வார்டு பகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்யாததைக் கண்டித்தும், மாமன்றம் ஒப்புதல் இல்லாமல் ரத்து செய்த பணிகளை மீண்டும் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாநகராட்சி அருகே உள்ள அண்ணா சிலை முன்பு மௌனப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பணிகளின் முக்கியத்துவத்தைப் பார்க்காமலும், மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்காமலும், அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமலும் எடுத்த நடவடிக்கையால் எனது வார்டில் பல பணிகள் முடிவடையாமல் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.