மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே வங்கியில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப் பள்ளியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து 2ஆயிரம் சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2015, 8:20 am

ரவி

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப் பள்ளியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து 2ஆயிரம் சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வங்கியின் பின் பக்க கதவை கேஸ் சிலிண்டர் பயண்படுத்தி உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வங்கியின் சிசி கேமராக்களை உடைத்து விட்டு லாக்கரில் உள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளனர். 25 ஆண்டுகளாக செயல் பட்டுவரும் இந்த வங்கியில் சுற்றியுள்ள 52 கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள், உதவி கண்காணிப்பாளர் ரோஹினி பிரியதர்ஷினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ரோபோவுடன் வந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது ரோபோ மோப்ப நாய் ஆந்திர மாநிலம் வேப்பன அல்லி நோக்கி சென்றதால் அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் சென்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கேள்விப் பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை தங்கள் நகைகளுக்கு பதில் கூறும்படி வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணம்மாள், அவர்களின் நகைகளை விரைவில் மீட்டு தருவதாகவும், காப்பீடு இருப்பதால் உரிய இழப்பீடுத் தொகை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  மேலும் இந்த கொள்ளை சம்பவம்  குறித்து தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.