ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு! ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில் புதன்கிழமை தொடங்கியது. கலந்தாய்வு முறையில் எவ்வித

News image
Updated On :1 ஜூலை 2015, 12:46 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில் புதன்கிழமை தொடங்கியது. கலந்தாய்வு முறையில் எவ்வித நன்கொடை இன்றி தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை நடைபெற்றதால் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1438 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. முதல் கட்ட கலந்தாய்விற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கு 930 பேருக்கும், பிடிஎஸ் படிப்பிற்கு 680 பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

முதல் கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 150 எம்பிபிஎஸ் இடங்கள், 80 பிடிஎஸ் இடங்கள். அதில் தரவரிசை (Rank List) அடிப்படையில் கலந்தாய்விற்கு மொத்தம் 930 மாணவ, மாணவியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் (Differentaly Abled Candidates)- 14 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில் 7 பேரும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சோதனையில் உரிய தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டனர்.

கலந்தாய்வில் பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று எம்பிபிஎஸ் படிப்பிற்கு அனுமதி சேர்க்கை பெற்றனர். அந்த மாணவ, மாணவியர்கள் விபரம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த எஸ். விஜயசிவரஞ்சனி பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1171. இவர் 197.00 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் அனுமதி சேர்க்கை பெற்றார். இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.திருப்பாவை பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1161. இவர் 197.00 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார்.

மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்.ஏ. சபரீஷ் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1154. இவர் 197.00 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் ஜூலை 3-ம் தேதிக்குள்ள கல்வி கட்டணத்தை கட்சி அனுமதி சேர்க்கை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் ஆண்டு கல்வி கட்டணம் ரூ.5,54,370 ஆகும்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், சிண்டிகேட் உறுப்பினர் கானூர் பாலசுந்தரம், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் என்.என்.பிரசாத், பல்மருத்துவப்புல முதல்வர் டாக்டர் மைதிலி, கலந்தாய்வு ஆலோசகர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவ, மாணவியர்களை வரவேற்றும், தமிழஅரசு இடஒதுக்கீட்டின் படி முற்றிலும் தகுதி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், நன்கொடை கிடையாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.