சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து இல்லாததால், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப்

News image
Updated On :9 ஜூலை 2015, 5:49 am

ஷேக் அப்துல்காதர்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து இல்லாததால், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 டிகிரிக்கு குறையாமல் வெப்பம் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்தவாறு தொடர்ந்து பெய்யவில்லை. ஜூன் மாதம் இறுதியில் குற்றாலம் சீசன் தொடங்கிய நிலையில் தற்போது குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் குற்றாலம் சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் அதிகமாக வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாதபோதிலும், அருவிகளுக்கு மிதமான நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து குறைந்து அணைகளே வறண்டாலும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும். ஆண்டு முழுவதும் இந்த அருவிகளில் தண்ணீர் விழுவதால், சுற்றுலாப் பயணிகள் எப்போது வந்தாலும் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வர்.

தற்போது குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். பாபநாசம் அருவியை விட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

விடுமுறை தினங்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.