/

கேரளாவுக்கு வெளிமாநில மது கடத்தல்: 60 மதுபான பாட்டிலுடன் ஒருவர் கைது

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு வெளிமாநில மதுபானங்களை கடந்த முயன்றவரை கூடலூர் கூடலூர் வடக்கு போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 ஜூலை 2015, 3:07 pm

அறிவழகன்

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு வெளிமாநில மதுபானங்களை கடந்த முயன்றவரை கூடலூர் கூடலூர் வடக்கு போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு வெளிமாநில மதுபானம் கடத்துவதாக கூடலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வடக்கு போலீஸார் அப்பகுதியி்ல வாகன சோதனையில் இருந்தபோது, சந்தேகப்படும் வகையான ஒருவரை மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் மறைத்து கேரளாவுக்கு கடத்த இருந்த 60 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது, கம்பம் புதுப்பட்டி சொசைட்டி தெருவைச் சேர்ந்த மூக்கையா(55) என்று தெரியவந்தது. இவர் கோவா  மதுபானத்தை கேரளாவுக்கு கடந்தி விற்பனை செய்ய சென்றதாக தெரிவித்தார். மூக்கையாவை வடக்கு போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து மதுப்பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.