கூடலூரில் சந்தனக்கட்டை கடத்தல்: 2 பேர் கைது
கூடலூரில் வடக்கு போலீஸார் வாகனச்சோதனையில்,இருந்தபோது இரண்டு பேர் சந்தனக்கட்டையுடன் புதன்கிழமை பிடிபட்டனர்.


கூடலூரில் வடக்கு போலீஸார் வாகனச்சோதனையில்,இருந்தபோது இரண்டு பேர் சந்தனக்கட்டையுடன் புதன்கிழமை பிடிபட்டனர்.
கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஸ் தலைமையில் போலீஸார் நோட்டக்கார புளியமரப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்களை பிடித்து, சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, 10 சந்தனமரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துபோது, மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில், சந்தனமரங்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு வந்ததபோது பிடிபட்டதாக தெரிவித்தனர். மேலும், இவர்கள் அதே ஊரில் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன் சடையாண்டி(30), மகேந்திரன் மகன் அருண்பாண்டியன்(23) என்றும் தெரிவித்தனர்.
சந்தனமரங்கள் வெட்டி கடத்தியவர்களை போலீஸார் வாக்குமூலம் பெற்று பின்னர், கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலம், அப்பகுதி வனவர் சண்முகசுந்தரரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மேற்கு சரக வன அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...