தமிழகத்திற்கு மோடி பல திட்டங்களை அளித்திருக்கிறார்: ஹச்.ராஜா
தமிழகத்திலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினரை தமிழகம் தந்தபோதும் அதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு அளிக்கும் திட்டங்களை குறைக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய


தமிழகத்திலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினரை தமிழகம் தந்தபோதும் அதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு அளிக்கும் திட்டங்களை குறைக்கவில்லை என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஹச்.ராஜா.
அறந்தாங்கியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்றபின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
நிலம் கையகப்படுத்தும் திட்டம் இரு அவைகளும் சேர்ந்து நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் நிச்சயம் நிறைவேற்றப்பட போகிறது இதனால் பல வேலை வாய்ப்புகள் உருவாகும் பல கிராமமக்கள் பயன்பெறுவார்கள்.தமிழகத்தை பாரதிய ஜனதா ஆட்சி இல்லை என்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே தந்தார்கள் என பிரதமர் மோடி எந்த திட்டத்தையும் குறைக்கவில்லை எய்ம்ஸ் மருத்துவமனை, இந்தியாமுழுவதும் தேர்வு செய்த ஸ்மார்ட் சிட்டிகளில் தமிழகத்திற்கு 12 நகரங்கள், புராதான நகரங்கள் பட்டியலில் காரைக்குடி உள்ளிட்ட 33 நகரங்கள், எண்ணூர் துறைமுக திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆம்பூர் கலவரத்தில் 5 ஆயிரம் பேர் திரண்டு வந்து காவல்துறையினரை தாக்கும் போது அவர்களை கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 55 காவலர்கள் தாக்கப்பட்டனர். 7 பெண்காவலர்கள் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டனர். 10 கோடி மதிப்பிலான இந்துக்களின் சொத்துக்கள் திட்டமிட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டன. 100க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் கடைகள் தாக்கப்பட்டுள்ளன. அரசு இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்கும் போது வேடிக்கை பார்கிறது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவில்லை
என்வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்ப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நன்றி இந்த செயல்களுக்கு பயப்படப்போவதில்லை எனது நடவடிக்கைகளை நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்றார்.
பேட்டியின் போது கட்சியின் அறந்தாங்கி நகரத் தலைவர் வீ.வீரமாகாளியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.நாராயணன், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...