ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் பரபரப்பு
கணவரை போலீஸார் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


கணவரை போலீஸார் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூர் திருவள்ளுவர்நகரில் வசிப்பவர் வேல்முருகன் (42). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (35). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உளளன. வேல்முருகன் ஒரு வருடத்திற்கு முன் திருப்பூரில் வேலை செய்து வந்தாராம். தற்போது வேல்முருகன் சொந்த ஊரில் வேலை செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் நரசிங்கநல்லூர் வந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப் போலீஸார் விசாரணைக்காக வேல்முருகனை அழைத்து சென்றனராம். இன்னமும் வேல்முருகனை போலீஸார் விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க குழந்தைகளுடன் வந்த சிவகாமி திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றாராம்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் அதனை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்காக சிவகாமியை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...