நெல்லை கோயில் சுவரில் துளையிட்டு திருட்டு
திருநெல்வேலி நகரில் உள்ள இசக்கியம்மன் கோயில் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை குத்துவிளக்குகளை திருடிச் சென்றனர்.


திருநெல்வேலி நகரில் உள்ள இசக்கியம்மன் கோயில் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை குத்துவிளக்குகளை திருடிச் சென்றனர்.
திருநெல்வேலி நகரம் நயினார்குளம் சாலையில் மாவு இசக்கியம்மன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை பூசாரி வழக்கம்போல் கோயிலை திறந்தபோது, பின்பக்கச் சுவரில் பெரிய அளவில் ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கோயில் சுவரையில் துளையிட்டு உள்ளே வந்து கோயிலில் இருந்த 4 பித்தளை குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோயில் உண்டியல் உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மொத்த மதிப்பு ரூ. 30 ஆயிரம்.
தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. கோயில் நிர்வாகி ஆர். முருகன் அளித்தபுகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...