சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளம்: அணைகளின் நீர்மட்டம் உயர்கிறது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேர்வலாறு, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

News image
Updated On :26 ஜூன் 2015, 10:28 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேர்வலாறு, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-44, பாபநாசம் கீழ் அணை-23, சேர்வலாறு அணை-15, மணிமுத்தாறு அணை-1.4, ராமநதி அணை-8, கருப்பாநதி அணை-40, குண்டாறு அணை-22, அடவிநயினார் அணை-13, கொடுமுடியாறு அணை-15, தென்காசி-11.3, ஆய்க்குடி-10.2, செங்கோட்டை-27.

2,000 கனஅடி நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,996 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,376 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,240 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 73 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 181 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 71 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 182 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

உயர்ந்து வரும் நீர்மட்டம்: நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71.05 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 79.07 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 84.50 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 55.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 50 அடியாகவும் இருந்தது.

இதேபோல், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 4.59 அடி உயர்ந்து 61.68 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 1.60 அடி உயர்ந்து 17.70 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 65 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 28.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.59 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 44.50 அடியாகவும் இருந்தது.

2 ஆவது நாளாக வெள்ளம்: தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
வெள்ளிக்கிழமை பகலில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீ்ர்படிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாகவும், அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.