ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமையன்று ஆனி  வருஷாபிஷேகம் நடைபெற்றது.

Published On :

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமையன்று ஆனி  வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் சனிக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்பட்டு, காலை 8.25 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வநது பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் இணை ஆணையர் (பொ) ஆர்.பொன்சுவாமிநாதன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை, திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் (மது விலக்கு) ராஜாமணி, திருக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் பி.பட்டாணி, உதவி ஆய்வாளர் ராணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.