ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணாமலைப் பல்கலை. பிஇ கவுன்சிலிங் தொடங்கியது! ஜூலை 1,2,3 தேதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சனிக்கிழமை (ஜூன் 27-ம் தேதி) காலை தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் 984

News image
Updated On :27 ஜூன் 2015, 12:49 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சனிக்கிழமை (ஜூன் 27-ம் தேதி) காலை தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் 984 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 1,2,3 தேதிகளில் நடைபெறுகிறது என துணைவேந்தர் செ.மணியன் அறிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2015-16 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.6-ம் தேதி முதல் வழங்கப்பட்டது.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. பிஇ படிப்பில் சேர 2431 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில் 2201 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியற்ற விண்ணப்பங்கள் 75. மீதமுள்ள 1965 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) காலை தொடங்கியது. பிஇ கவுன்சிலிங் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 1102 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 863 பேருக்கு பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் மெக்கானிக்கல், சிவில், எலக்டிக்ரானிக் அன்ட் எலக்டிரிகல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று ரேங்க்கினை பெற்ற மாணவ, மாணவியர்கள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல்நாள் பிஇ கவுன்சிலிங்கில் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மாணவர் கே.அருள்வேல் முதல் ரேங்க் (கட்-ஆஃப் 194.75) பெற்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த மாணவி சி.மீரா இரண்டாவது ரேங்க் (கட்-ஆஃப் 194.50) பெற்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த ஏ.ஆகாஷ் மூன்றாவது ரேங்க் (கட்-ஆஃப் 193.50) பெற்று மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த ரவிகிரன் (கட்-ஆஃப் 98.50) சிவில் இன்ஜினியரிங் பயிலஅனுமதி சேர்க்கை ஆணை பெற்றார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் முதல் 10 ரேங்க் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஜெ.வசந்தகுமார், சிண்டிகேட் உறுப்பினர்கள் பூங்குன்றம், கானூர் பாலசுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, பொறியியல் புல முதல்வர் செ.வேலுசாமி, தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் ராம.சந்திரசேகரன், சேர்க்கை பிரிவு ஆலோசகர் தி.ராம்குமார் மற்றும் துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பில் 2130 சேர்க்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு 1965 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்விற்கு தமிழக மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும். அதிலும் இடங்கள் காலியாக இருந்தால், வெளிமாநில மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் பொது பிரிவில் அனுமதி சேர்க்கை செய்யப்படும். தற்போது அனுமதி சேர்க்கை ஆணை பெற்றவர்களுக்கு கடைசி தேதி ஜூலை 8-ம் தேதியாகும்.

கல்வி கட்டணத்தை மாணவர்கள் இரண்டு தவணையாக செலுத்தலாம். மேலும் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை உள்ளிட்ட 24 வகையான உதவித்தொகை பற்றியும், அனைத்து துறைகள் பற்றிய விபரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வு மண்டபத்தின் வெளியே தனியாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1,2,3 தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.