சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அடவிநயினார், குண்டாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2015, 12:41 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து நீர்மட்டமும் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 19.2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், தென்காசியில் 1 மி.மீ மழையும், செங்கோட்டையில் 12 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1600 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 332 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 176.78 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 58.61 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு 44 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 32 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 31.16 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 42.55 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.பாபநாசம் அணையில் இருந்து 910 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடியும், தாமிரவருணி ஆற்றில் 300 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்மட்டம் நிலவரம்:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து 85.20 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.56 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 62 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 60.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 67.92 அடி,

குண்டாறு அணையின் நீர்மட்டம் 3.33 அடி உயர்ந்து 25.25 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 81.25 அடி, வடக்கபு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.53 அடி, கொடுமுடியாறு அணையின் நீ்ரமட்டம் 52.50 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் 42.55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.