ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம், போலிஸார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை தோட்டத்து கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

News image
Updated On :3 மார்ச் 2015, 2:50 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை தோட்டத்து கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

விராலிமலை அருகேயுள்ள வானத்திராயன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் கார்த்திகா(18) இவர் 5 வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதிகளில் வயல்வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் திங்கள்கிழமை இரவிலிருந்து கார்த்திகாவை காணவில்லையாம், இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பலஇடங்களில் கார்த்திகாவை தேடியும் கிடைக்காத நிலையில்,  செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் கார்த்திகா சடலமாக மிதப்பதாக பெற்றோற்களுக்கும் விராலிமலை போலிஸாருக்கும் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு இலுப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து கார்திகாவின் தந்தை அளித்து புகாரின் பேரில் விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.