புற்றுநோயாளிகள் பயன்பாட்டுக்கு தலைமுடியை தானம் வழங்கும் விழா சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பிளஸ்ஸிங்ஸ் பள்ளியில் சனிக்கிழமை மார்ச் 7ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளியின் முதல்வர் சோபியா ரேச்சர் மேரி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
புற்றுநோயாளிகள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போது அவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு செயற்கை முடியை தயாரித்து வழங்குவதற்காக முடிதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முடியை தானம் செய்ய விரும்புவர்கள் இதில் கலந்து கொண்டு தானமளிக்கலாம். பள்ளியின் மூலம் மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் ஆகியோருக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 பேர் இதில் தங்கள் தலைமுடியை தானமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து க்ரீன் டிரென்ட்ஸ் சலூனின் உதவியுடன் தலைமுடி சேகரிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தானத்தை அளிக்கலாம். பள்ளி மாணவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









